உலகம்

பாலஸ்தீனக் குழந்தைக்குச் சிங்கப்பூர் எனப் பெயர் சூட்டி கௌரவித்த தாய் – தந்தை

காஸாவில் பிறந்த பாலஸ்தீனக் குழந்தைக்கு, தனது தாய் மற்றும் தந்தை சிங்கப்பூர் (Singapore) எனப் பெயர் சூட்டி சிங்கப்பூர் நாட்டை கௌரவித்துள்ளனர்.

இச்செய்தியைச் சிங்கப்பூரைச் சேர்ந்த தொண்டூழியரான கில்பர்ட் கோ (Gilbert Goh) தனது இன்ஸ்டகிராம் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

கில்பர்ட் கோ நடத்தும் Love Aid Singapore அறநிறுவனம் காஸா மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நிதி திரட்டி, அங்கு சமையல் கூடங்களை (Community Kitchens) நிறுவியுள்ளது.

இந்தச் சமையல் கூடங்களில் உதவியாளராக புரியும் காஸாவைச் சேர்ந்த நபர், சிங்கப்பூர் மக்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தமது குழந்தைக்குச் சிங்கப்பூர் என பெயரிட்டுள்ளார்.

அவரது மனைவி கர்ப்பிணியாக இருந்தபோது, இந்தச் சிங்கப்பூர் சமையல் கூடத்தில் தொடர்ந்து உணவு உட்கொண்டதை அவர் நன்றியுடன் நினைவு கூர்ந்துள்ளார்.

குழந்தை நலமாக வளரத் தாம் வாழ்த்துவதாகவும், இதுவரை காஸா மக்களுக்கு உதவி அளித்த அனைத்துச் சிங்கப்பூரர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கில்பர்ட் கோ குறிப்பிட்டுள்ளார்.

Love Aid Singapore அமைப்பு எல்லை, இனம், சமயம் பார்க்காமல் அனைவருக்கும் உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 5 times, 5 visits today)

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்