உலகின் பெரும்பாலான மக்கள் பல் சொத்தை பிரச்சினையை எதிர்கொள்கின்றனர்!
உலகில் பெரும்பாலான மக்கள் எதிர்கொள்ளும் நோயாக பல் சொத்தை மாறிவிட்டது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
உலக சனத்தொகையில் 3.5 பில்லியன் பேர் பல் சிதைவு நிலையை எதிர்நோக்கி வருவதாக இலங்கை பல் மருத்துவ சங்கத்தின் பிரதி செயலாளர் டொக்டர் நிலந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
உலக பல் சுகாதார தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டு அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், அனைத்து பல் நோய்களும் வராமல் தடுக்கலாம் என்றும், அது பொதுவானதாக இருக்க வேண்டியதில்லை என்றும் கூறியுள்ளார்.
அதிகப்படியான சர்க்கரை, பல் துலக்காமல் இருப்பது, டூத் பேஸ்ட் பயன்படுத்தாமல் இருப்பது போன்றவைதான் பல் சொத்தையை பாதிக்கும் என்று கூறினார்.
(Visited 5 times, 1 visits today)