ஐரோப்பா

மொஸ்கோ தாக்குதல் : சந்தேகநபர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டு பதிவு!

ரஷ்யாவின் மொஸ்கோவில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நால்வருக்கு எதிராக பயங்கரவாத குற்றச்சாட்டை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அவர்கள் நால்வருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என மொஸ்கோ மாவட்ட நீதிமன்றத்தை மேற்கோள்காட்டி வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை, மாஸ்கோவில் உள்ள திரையரங்கில் நடந்த தாக்குதலில் 137 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் கிட்டத்தட்ட 200 பேர் காயமடைந்தனர்.

இது தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் 04 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, அவர்கள் அந்நாட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களை எதிர்வரும் மே மாதம் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அவர்களின் விசாரணையின் தேதியைப் பொறுத்து தடுப்புக் காலம் நீட்டிக்கப்படும். மேலும், இரண்டு பிரதிவாதிகள் தற்போது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர் இருப்பதாகவும் நீதிமன்றத்தை மேற்கோள்காட்டி வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

(Visited 9 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!