மொரோக்கோ நிலநடுக்கம் : மூன்றாவது நாளாகவும் தொடரும் மீட்பு பணிகள்!
மொராக்கோவின் பேரழிவுகரமான நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,497 ஆக உயர்ந்துள்ளது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், 2497 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2400 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் இன்று (10.09) மூன்றாவது நாளாகவும் மீட்பு பணிகள் முடக்கிவிடப்பட்டுள்ளன.
இதேவேளை ஸ்பெயின், கத்தார், பிரிட்டன், மற்றும் ஐக்கிய அரசு எமிரேட்ஸ் ஆகிய நான்கு நாடுகள் தேவையான உதவிகளை வழங்கியுள்ளன.
மேலும் குறித்த நிலநடுக்கம் காரணமாக 03 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது.





