மொராக்கோ நிலநடுக்கம்: பிறந்த 3 மணிநேரத்தில் குழந்தைக்கு ஏற்பட்ட பரிதாப நிலை
கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 8) இரவு மொராக்கோவில் பேரழிவு தரும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதற்ற்கு சில நிமிடங்களுக்கு முன்பு கதீஜா என்னும் தாய்க்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
குழந்தைக்கு இன்னும் பெயர் கூட வைக்கவில்லை.ஆனால் அவளுடைய முதல் வீடு சாலையோரம் அமைக்கப்பட்ட கூடாரம்.
நிலநடுக்கம் ஏற்பட்டதில் தாயும் மகளும் காயமின்றி இருந்தபோதிலும், மராகேஷில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இருந்து அவ்ர்கள் வெளியேற்றப்பட்டனர். குழந்தை பிறந்து மூன்று மணி நேரம் கழித்து, விரைவான சோதனைக்குப் பிறகு, அவர்கள் வெளியேறும்படி கேட்கப்பட்டனர்.
“பின்னதிர்வுகளின் பயம் காரணமாக அவர்கள் எங்களை வெளியேறச் சொன்னார்கள்” என்று கதீஜா கூறினார்.
புதிதாகப் பிறந்த குழந்தையுடன், கதீஜாவும் அவரது கணவரும் சனிக்கிழமை அதிகாலை டாக்ஸி மூலம் மராகேஷிலிருந்து 65 கிமீ (40 மைல்) தொலைவில் உள்ள அட்லஸ் மலைகளில் உள்ள டாட்டார்ட்டில் உள்ள தங்கள் வீட்டிற்குச் செல்ல முயன்றனர்.
ஆனால் அவர்கள் அங்கு செல்லும் வழியில் நிலச்சரிவுகளால் சாலைகள் அடைக்கப்பட்டிருப்பதைக் கண்டனர். அஸ்னி கிராமம் வரை மட்டுமே அவர்களால் செல்ல முடிந்தது.
அன்றிலிருந்து அந்த குடும்பம் பிரதான சாலை ஓரத்தில் கூடாரம் அமைத்து வாழ்ந்து வருகிறது. “அவர் அதிகாரிகளிடமிருந்து எந்த உதவியும் பெறவில்லை,” என்று அவர்கள் கூறிகின்றனர்.
கதீஜா தனது குழந்தையை வெயிலில் இருந்து பாதுகாக்க ஒரு சிறிய டவலில் வைத்திருந்தாள்.
“இந்த கிராமத்தில் உள்ள சிலரிடம் எங்களையும், குழந்தையையும் சூரிய ஒளியில் இருந்து மறைக்க போர்வைகள் கேட்டோம், எனவே நாங்கள் ஒரு அடிப்படை கூடாரத்தை உருவாக்க முடிந்தது” என்று கதீஜா கூறினார்.
“கடவுள் மட்டுமே எங்கள் ஆதரவு” என்று கதீஜா கூறியுள்ளார். அவர் தனது குழந்தைக்கு ஒரே ஒரு ஆடை மட்டுமே இருப்பதாக கூறினார்.
அவர்களது சொந்த ஊரைச் சேர்ந்த நண்பர்களின் வீடுகளும் மோசமாக சேதமடைந்துள்ளதாகவும், எப்போது தங்குவதற்கு ஏற்ற இடம் கிடைக்கும் என்று தெரியவில்லை என்றும் கதீஜா குடும்பத்தினரிடம் கூறிகின்றனர்.