கொரியாவிற்கு சென்றுள்ள 78,000 க்கும் மேற்பட்ட இலங்கை தொழிலாளர்கள்!
வேலை அனுமதி முறையின் கீழ் 78,000 க்கும் மேற்பட்ட இலங்கை தொழிலாளர்கள் கொரியாவுக்குச் சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 2004 முதல் 2024 வரை அந்த முறையின் கீழ் 78,153 பேர் கொரிய வேலைகளுக்குச் சென்றுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நேற்று (18) வரை, 710 வேலை தேடுபவர்கள் கொரியாவிற்கு வேலைக்காக சென்றுள்ளனர்.





