இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 70க்கும் மேற்பட்டவர்கள் பலி

காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேலிய வான் தாக்குதலில் காஸாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயிரிழந்தவர்களில் ஐ.நா உதவிப் பணியாளர் ஒருவரும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவர் 56 வயதான இசாம் அல் முகராபி.
காசா பகுதியில் வான்வழித் தாக்குதல்களில் அவரது மனைவி மற்றும் ஐந்து குழந்தைகள் மற்றும் பல நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
(Visited 11 times, 1 visits today)