இலங்கையில் மருந்து தரப்பரிசோதனையில் 70 இற்கும் மேற்பட்ட மருந்துகள் தோல்வி!
2023 ஆம் ஆண்டில் இதுவரை மொத்தம் 73 மருந்துகள் தரப் பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தர சோதனையில் தோல்வியடைந்த மருந்துகளில், 45 மருந்துகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை எனவும், 17 மருந்துகள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை எனவும், மற்றவை பாகிஸ்தான், ஜப்பான் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இருந்து வந்தவை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தரப் பரிசோதனையில் தோல்வியடைந்ததாகக் கண்டறியப்பட்ட மருந்துகளில், சில திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதுதவிர, மொத்தம் 35 பேட்ச்கள் Flucloxacillin Cap திரும்பப் பெறப்பட்டுள்ளன. இது 2017 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை அதிகபட்ச எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளது. குறிப்பிட்ட மருந்து இரத்மலானையில் உள்ள அரச மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனத்தினால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.