வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தால் 640க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!!
இரண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களால் 640க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நுகேகொடையில் உள்ள கங்கோடவில நீதிமன்றத்திற்கு அருகில் பாதிக்கப்பட்ட தரப்பினரால் இன்று அமைதியான போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அவர்களிடம் இருந்து ரூ. 860 மில்லியன் முதல் 900 மில்லியன் வரை மோசடி செய்துள்ளதாகவும் இந்த விவகாரத்தை பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் நீதி மற்றும் நியாயத்தை உறுதி செய்ய எந்த நேரத்திலும் நிற்பேன் என்றும் கூறியுள்ளார்.





