நேபாளத்தில் இரண்டு பேருந்துகள் நிலச்சரிவில் சிக்கி 60 க்கும் மேற்பட்டோர் மாயம்!
மத்திய நேபாளத்தில் மதன்-ஆஷ்ரித் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 2 பயணிகள் பேருந்து, நிலைகுலைந்து திரிசூலி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் பேருந்தில் இருந்த 60-க்கும் மேற்பட்ட பயணிகள் காணாமல் போயுள்ளனர்.
பேருந்தில் பயணித்த மூவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஒரு வாரமாக நேபாளத்தில் கனமழை பெய்துவருகிறது.
இந்த மழையால், நேபாளத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து ஏற்பட்டுவரும் நிலச்சரிவில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
காணாமல் போன பயணிகளைத் தேடுவதற்காக அதிகாரிகள் இராணுவம் மற்றும் காவல்துறையினரை அணிதிரட்டினர், ஆனால் தொடர்ச்சியான மழை பல இடங்களில் இப்பகுதிக்கு செல்லும் பாதையைத் தடுப்பதன் மூலம் நிலச்சரிவுகள் மீட்பு முயற்சிகளை கடினமாக்குகின்றன என்று பூசல் கூறியுள்ளார்.