தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற இரண்டு வாகன விபத்துக்களில் 40க்கும் அதிகமானோர் உயிரிழப்பு!
தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் இரண்டு இரவு நேர போக்குவரத்து விபத்துகளில் குறைந்தது 44 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதன் கிழமையன்று கஸ்னி மாகாணத்தில் பேருந்துகள் சம்பந்தப்பட்ட விபத்துகளில் மேலும் 76 பேர் காயமடைந்தனர் என்று தலிபான்களால் நடத்தப்படும் தகவல் மற்றும் கலாச்சாரத் துறையின் மாகாணத் தலைவர் ஹமிதுல்லா நிசார் தெரிவித்துள்ளார்.
விபத்துகளில் ஒன்று எரிபொருள் தாங்கி மற்றும் மற்றொன்று சரக்கு டிரக் ஆகியவற்றுடன் தொடர்புடையது என்றும் காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
ஆப்கானிஸ்தானில் போக்குவரத்து விபத்துக்கள் பொதுவானவை, மோசமான உள்கட்டமைப்பு பல தசாப்த கால யுத்தத்தால் மோசமடைந்தது,





