கொரியாவில் இலங்கை இளைஞரக்களுக்கு அதிக தொழில்வாய்ப்பு!
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், கொரிய வேலைக்காக இலங்கையில் இருந்து ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கை மற்ற ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இரு மடங்காக அதிகரித்துள்ளதாக கொரிய குடியரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் லீ ஜங்சிக் தெரிவித்துள்ளார்.
பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் கொரிய தூதுவர் லீ மியுங் உள்ளிட்ட குழுவினருக்கும் இடையில் டெம்பிள் ஹவுஸில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே லீ ஜங்சிக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கொரிய மொழி அறிவு கொண்ட திறமையான தொழிலாளர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதாரம், விவசாயம், கல்வி, தகவல் தொழிநுட்பம் உள்ளிட்ட துறைகளின் அபிவிருத்திக்காகவும், கொரியாவில் இலங்கை தொழிலாளர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்கும் வேலைத்திட்டத்திற்கும் கிடைத்துள்ள ஆதரவுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன நன்றி தெரிவித்தார்.
இளைஞர் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் கொரிய மொழியைக் கற்பிப்பதற்காக கொரிய அரசாங்கத்திடம் இருந்து மேலும் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் கூறினார்.
இந்த முன்மொழிவுகளை தாம் சாதகமாக பரிசீலிப்பதாகத் தெரிவித்த தொழிலாளர் அமைச்சர் லீ ஜங்சிக், இலங்கைக்கான தனது விஜயத்தின் போது, இலங்கையில் கொரிய மொழியைக் கற்பிக்கும் நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்குச் செல்லும் யோசனை இருப்பதாகத் தெரிவித்தார்.