மூக்குத்தி அம்மன் 2 – மாஸ் அப்டேட்

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் கடந்த 2020 – ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.
இப்படத்தில் ஊர்வசி, மௌலி, ஸ்ம்ருதி வெங்கட், அஜய் ஜோஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். நேரடியாக OTT -யில் வெளிவந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
இந்நிலையில், இப்படம் குறித்து ஒரு அதிரடி அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாரா இரட்டை வேடத்தில் நடிக்கிறாராம்.
அதில் ஒன்று அம்மனாகவும் மற்றொரு ரோலில் போலீஸாக நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் படத்தில் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் காத்திருப்பது உறுதி என சொல்லப்படுகிறது.
(Visited 1 times, 1 visits today)