துப்பாக்கி சட்டத்தை உருவாக்கும் மாண்டினீக்ரோ : சட்டவிரோத ஆயுதங்களை பறிமுதல் செய்யவும் திட்டம்!
மாண்டினீக்ரோவில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை தொடர்ந்து ஆயுத பாவனையை கட்டுப்படுத்துவதற்கான வழிவகைகளை அரசு ஆராய்ந்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.
மாண்டினீக்ரோவின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் அவசர அமர்வு புதிய துப்பாக்கிச் சட்டத்தை உருவாக்க தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல் அந்நாட்டில் வசிக்கும் 620,000 மக்களிடம் காணப்படும் சட்டவிரோத ஆயுதங்களை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அட்ரியாடிக் கடல் தேசம் ஆழமாக வேரூன்றிய துப்பாக்கி கலாச்சாரத்தைக் கொண்டுள்ளது. தனிநபர் சட்டவிரோத ஆயுதங்களின் எண்ணிக்கையில் மாண்டினீக்ரோ உலகில் ஆறாவது இடத்தில் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(Visited 1 times, 1 visits today)