கூலியின் அடுத்த பாடல் “மோனிகா” – வெளியீட்டுத் திகதி அறிவிப்பு

கூலி திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீட்டுத் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கூலி திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா ஜூலை 27 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், அனிருத் இசையமைப்பில் உருவான இப்படத்தின் இரண்டாவது பாடல் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, நடிகை பூஜா ஹெக்டே நடனமாடிய ’மோனிகா’ என்கிற பாடலை ஜூலை 11 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
(Visited 2 times, 2 visits today)