ஆசிய கோப்பையை வாங்க இந்திய அணிக்கு அழைப்பு விடுத்த மோசின் நக்வி(Mohsin Naqvi)

2025ம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் (UAE) நடைபெற்றது. இதில் சூர்ய குமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்த தொடரில் விளையாட்டை தாண்டி இரு நாட்டு அரசியல் மேலோங்கி காணப்பட்டது. காரணம் பஹல்காம் (Pahalgam attack) பயங்கரவாத தாக்குதலுக்கு எதிரொலியாக பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்துவிட்டனர்.
அந்தவகையில், தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டு வெற்றி பெற்றது. பிறகு நடந்த பரிசளிப்பு விழாவில் ஆசிய கோப்பையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரும், அந்நாட்டு மந்திரியுமான மோசின் நக்வியிடம் (Mohsin Naqvi) இருந்து வாங்க சூர்யகுமார் யாதவ் மறுத்து விட்டார்.
இதனால் கோப்பையை இந்தியாவிடம் கொடுக்க மோசின் நக்வி மறுத்து தெரிவித்து கோப்பையை மீண்டும் கொண்டு சென்றுவிட்டார்.
அதனை தொடர்ந்து இந்திய அணிக்கு கோப்பையை வழங்குமாறு BCCI சார்பாக பல்வேறு பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டது. ஆனால் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக தான் இருக்கும் வரை கோப்பையை வழங்கும் உரிமை வேறு யாருக்கும் இல்லை என மோசின் நக்வி உறுதியாக இருந்தார்.
இந்நிலையில், பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு மோசின் நக்வி, BCCIக்கு ஒரு மின்னஞ்சல் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
அதில் வரும் நவம்பர் 10ம் திகதி துபாயில் இந்திய அணிக்கு ஆசிய கோப்பையை வழங்கும் நிகழ்ச்சியை வைத்திருப்பதாகவும், இதில் தவறாமல் இந்திய அணி வீரர்களும் கேப்டன் சூர்யகுமார் யாதவும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் கோப்பையை என் கையில் தான் இந்திய அணி வாங்க வேண்டும் என்று மோசின் நக்வி குறிப்பிட்டுள்ளார்.