நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ளும் மோடி அரசு!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினருக்கு இடையே நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்து பிரதமர் மோடி தனது கருத்தை தெரிவிக்கும்படி எதிர்க்கட்சிகள் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்துள்ளன.
காங்கிரஸ் தலைவர் பா.சிதம்பரமும் இந்த விடயத்தில் மோடி மௌனம் காப்பதாக கூறி கடுமையான விமர்சனத்தை வெளியிட்டிருந்தார்.
மோடி அரசுக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் பழங்குடியினருக்கு இடையே நடந்த மோதல்களில் 130க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 12 times, 1 visits today)