நேருக்கு நேர் சந்திக்கும் மோடி மற்றும் ஜி ஜின்பிங்
சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடையே நேருக்கு நேர் சந்திப்பு நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதனை இந்திய வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தென்னாபிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் இன்று ஆரம்பமாகவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டை ஒட்டியே இந்திய-சீன தலைவர்களின் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று தென்னாப்பிரிக்கா செல்கிறார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இன்று தென்னாப்பிரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவை பிரிக்ஸ் பிரதிநிதித்துவ நாடுகள்.
அதன்படி இந்த ஆண்டுக்கான மாநாட்டில் தென்னாபிரிக்கா பங்களிப்புச் செய்யும்.
தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா ஏனைய உறுப்பு நாடுகளின் தலைவர்களை மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்திருந்தார்.
ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த ஆண்டு நடைபெறும் மாநாட்டில் அதிபர் விளாடிமிர் புடின் பங்கேற்க மாட்டார் என ரஷ்யா தெரிவித்துள்ளது.
ஆனால் வீடியோ தொழில்நுட்பம் மூலம் மாநாட்டில் கலந்து கொள்வார்.