கலிபோர்னியாவில் மிதமான நிலநடுக்கம் பதிவு!
கலிபோர்னியாவில் உள்ள ஆரஞ்சு கவுண்டியில் புல்லர்டனில் மிதமான நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த நிலநடுக்கமானது ரிக்கடர் அளவில் 3.5 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் அனாஹெய்மிலிருந்து ஒரு மைலுக்கும் குறைவாகவும், பிளாசென்டியாவிலிருந்து ஒரு மைல் தொலைவிலும், ப்ரியாவிலிருந்து இரண்டு மைல் தொலைவிலும், லா ஹப்ராவிலிருந்து இரண்டு மைல் தொலைவிலும் உணரப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.





