கோவை-ரத்தினபுரியில் இரு கார்களுக்கு தீ வைத்து விட்டு தப்பிச்சென்ற மர்ம நபர்கள்
 
																																		கோவை ரத்தினபுரி பகுதியில் இரண்டு கார்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரத்தினபுரி நேரு வீதியில் உள்ள பள்ளி அருகே அந்தப் பகுதியை சேர்ந்த இரண்டு பேர் நேற்று இரவு தங்களது கார்களை நிறுத்தியிருந்தனர். நள்ளிரவு அங்கு வந்த மர்ம நபர்கள் இரண்டு கார்களுக்கும் தீ வைத்து தப்பி சென்றதாக தெரிகிறது.
கார் மளமளவென தீ பிடித்து எரிவதை கண்ட அந்த பகுதி மக்கள் தீயணைப்பு துறையினர் மற்றும் ரத்தினபுரி பொரிஸாருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக தீயணைப்பு மற்றும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பின்னர் தீயணைப்பு வீரர்கள் காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் ஒரு கார் முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது. மற்றொரு கார் முன் பகுதி மட்டும் எரிந்தது. இது குறித்து ரத்தினபுரி பொலிஸார் வழக்கு பதிவு செய்து கார்களை தீவைத்து எரித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள CCTV காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
 
        



 
                         
                            
