115 மீட்டர் உயர பள்ளத்தாக்கிலிருந்து விழுந்து உயிர்தப்பிய அதிசய பூனை
அமெரிக்காவில் 115 மீட்டர் உயரப் பள்ளத்தாக்கிலிருந்து கீழே விழுந்து அதிஷ்டவசமாக ஒரு பூனை உயிர்தப்பிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளத..
ஒரு கணவன் மனைவியும் பூனையும் பள்ளத்தாக்கிலிருந்து விழுந்தது தெரியவந்தது.
சம்பவத்தில் தம்பதி உயிரிழந்துள்ளனர். பூனை ஒரு கறுப்பு பையினுள் இருந்ததாக விலங்குப் பாதுகாப்பு அமைப்பு ஒன்று கூறியது.
அந்தப் பூனைக்கு சுமார் 12 வயதாகிறது. உயிரிழந்த தம்பதிக்குப் பக்கத்தில் அது கண்டுபிடிக்கப்பட்டது.
யூட்டா மாநிலத்தில் உள்ள பிரைஸ் கேன்யன் (Bryce Canyon) தேசியப் பூங்காவில் அந்தச் சம்பவம் நடந்தது.
பூனை நலமாக இருப்பதாக அமைப்பு தெரிவித்தது. அதற்கு ஏதேனும் காயம் ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.





