இலங்கை செய்தி

08 பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மகாவலி ஆற்றின் சில நீரேந்து பகுதிகளில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருவதால் அடுத்த 48 மணித்தியாலங்களில் மகாவலி ஆற்றின் ஓரத்தில் உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய கின்னியா, மூதூர், கந்தளாய், சேருவில, வெலிகந்த, லங்காபுர, தமன்கடுவ மற்றும் திம்புலாகல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மட்டக்களப்பு பொலன்னறுவை வீதி (கல்லெல்ல பகுதி), சோமாவதிய ரஜ மகா விஹாரைக்கான அணுகல் பாதை மற்றும் சோமாவதிய ரஜ மகா விஹாரையைச் சுற்றியுள்ள பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, சோமாவதிய ரஜ மகா விஹாரைக்குச் செல்லும் பக்தர்கள் அடுத்த சில நாட்களுக்கு மறு அறிவிப்பு வரும் வரை அந்தப் பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அத்துடன் மேற்கூறிய பகுதிகளில் மகாவலி ஆற்றுக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெள்ள நிலைமைகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!