மூன்றாம் தவணைப் பரீட்சையை தடைசெய்ய கல்வி அமைச்சு உத்தரவு!
2025 ஆம் கல்வியாண்டில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மூன்றாம் தவணைப் பரீட்சை நடத்துவதைத் தடை செய்யும் உத்தரவை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
அனைத்து பாடசாலை முதல்வர்கள் உட்பட தொடர்புடைய அதிகாரிகளுக்கு இது தொடர்பில் அறிவிக்கும் சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது.
சுற்றறிக்கைக்கு அமைய, இந்த விஷயத்தில் முன்னர் தெரிவிக்கப்பட்ட அறிவுறுத்தல்கள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்பட்டு விதிவிலக்கு இல்லாமல் செயல்படுத்தப்பட வேண்டும் என்று அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.





