மத்திய வங்கி ஊழியர்களுக்கு மட்டும் ஏன் அதிக சம்பளம்? : நிதி இராஜாங்க அமைச்சர் விளக்கம்!
மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தை தீர்மானிக்கும் அதிகாரம் வங்கிச் சட்டத்தின் பிரகாரம் சுயாதீன நிறுவனமாக மத்திய வங்கிக்கே வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அதன்படி, அந்த ஊழியர்களின் சம்பளம் குறித்து அரசு எந்த முடிவும் எடுக்காது என்றார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், அந்தச் சட்டத்தின்படி, மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், உலகின் அனைத்து மத்திய வங்கிகளுக்கும் சிறப்புப் பணியாளர்களிடம் இருந்து சிறப்பு உழைப்பைப் பெறுவதால், அவர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.
நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கியமான நிறுவனமாக திகழும் மத்திய வங்கியில் சிறப்பு அறிவு கொண்ட சிறப்பு ஆட்கள் இருக்க வேண்டும் என்று கூறிய அவர், சிறப்பு ஆட்களை பணியமர்த்தாததால் ஏற்படும் அழிவை தான் அனுபவித்துள்ளேன் என்றார்.