இலங்கையை விட்டு வெளியேறிய லட்ச கணக்கான மக்கள் – வெளியான தகவல்
இலங்கையில் கடந்த இரண்டு வருடங்களில் 2 565 365 (2.5 மில்லியன்) பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.
மத்திய வங்கியின் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார் .
மேலும் 2022ம் ஆண்டில் 11 027 758 நபர்களும் 2023ம் ஆண்டு 14 037 607 நபர்களும் வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
இவர்களில் வெளிநாட்டு வேலைக்காகச் சென்றவர்களின் எண்ணிக்கை 6 008 925 பேர். இது வெளிநாடு வேலைக்காக சென்றுள்ள மொத்த நபர்கள் எண்ணிக்கையில் 24 சதவீதம் ஆகும்.
கடந்த 2022 ஆம் ஆண்டு 311 269 பேரும் கடந்த ஆண்டில் 297 656 பேரும் வெளிநாட்டு வேலைக்காக வெளியேறியுள்ளனர் என்று பேராசிரியர் கூறியுள்ளார் .
2023ஆம் ஆண்டு வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியவர்களில் சுமார் எழுபது வீதமானவர்கள் தொழில்ரீதியாக உயர் தகைமை பெற்ற பொறியியலாளர்கள், வைத்தியர்கள், சட்டத்தரணிகள், கணக்காளர்கள் போன்றவர்கள் எனத் தெரிவித்த திரு.வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார் .
கடந்த வருடம் வெளிநாட்டு வேலைகளுக்குச் சென்றவர்களில் 34% சதவீதமானவர்கள் 25-34 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார் .
கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளிநாடு சென்றவர்களில் 55 சதவீதம் பேர் ஆண்களும், 45 சதவீதமானோர் பெண்கள் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது .
இதேவேளை, கடந்த இரண்டு வருடங்களில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை 18,200,479 ஆகும்.
பொருளாதார நெருக்கடி மற்றும் விரக்தியின் காரணமாக இவர்கள் வெளிநாடு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.