ஐரோப்பா

மில்லியன் கணக்கான பிரித்தானியர்கள் ஆஸ்திரேலியாவில் வசிக்கலாம் – புதிய ஒப்பந்ததால் ஏற்பட்ட மாற்றம்

மில்லியன் கணக்கான பிரித்தானியர்கள் இப்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கவும் வேலை செய்யவும் முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலை விடுமுறை விசாக்களுக்கான வயது வரம்பு 35 ஆக ஆஸ்திரேலியா உயர்த்தியமையினால் இந்த சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

அனைத்து பிரித்தானிய குடிமக்களுக்கும் வயது வரம்பு 30 இல் இருந்து நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 16 மில்லியன் பெரியவர்கள் இப்போது தகுதி பெற்றுள்ளனர்.

சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான இந்த மாற்றங்கள், கடந்த ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் முக்கிய பகுதியாகும்.

இந்த ஒப்பந்தம் பிரித்தானியர்களுக்கு மாத்திரமின்றி ஆஸ்திரேலியர்களுக்கும் பிரித்தானியாவில் வேலை செய்வதற்கும் பயணம் செய்வதற்கும் எளிதாக இருக்கும்.

இது நியூசிலாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையே 35 வயதுக்குட்பட்டவர்களுக்கு வேலை விடுமுறை விசாக்களை விரிவுபடுத்துவதற்கான ஒப்பந்தத்தை பின்பற்றுகிறது.

இந்த திட்டம் பிரித்தானியர்கள் ஆஸ்திரேலியாவில் 2024ஆம் ஆண்டு ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் மூன்று ஆண்டுகள் வரை வேலை செய்ய மற்றும் வாழ அனுமதிக்கும். அத்துடன், சுற்றுலா பயணங்கள் செய்ய அனுமதிக்கப்படும் வேலை வகைகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் நீக்கப்படும்.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!