தென் அமெரிக்கா

கொலம்பியாவில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர் ;9 வீரர்கள் பலி

கொலம்பியாவின் வடக்கு பகுதியில் உள்ள சான்டா ரோரா நகராட்சியில் முகாமிட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு தேவையான பொருட்கள் ஹெலிகாப்டரில் கொண்டு செல்லப்பட்டன. பொருட்களை இறக்கிவிட்டு புறப்பட்ட ஹெலிகாப்டர் சிறிது நேரத்தில் விழுந்து நொறுங்கியது. இதில், ஹெலிகாப்டரில் இருந்த 9 வீரர்களும் பலியாகினர். உள்ளூர் நேரப்படி நேற்று மதியம் இவ் விபத்து நிகழ்துள்ளது.

புறப்பட்ட சிறிது நேரத்தில் ஹெலிகாப்டர் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்ததாகவும், பின்னர் சாண்டா ரோசா நகராட்சிக்கு அருகில் விபத்துக்குள்ளானது தெரியவந்ததாகவும் ராணுவம் செய்தி வெளியிட்டுள்ளது

9 soldiers killed in Colombian army helicopter crash

இந்த விபத்து குறித்து கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு பொருட்களை வழங்கிவிட்டு திரும்பியபோது விபத்து நிகழ்ந்ததாகவும் கூறி உள்ளார்.

சான்டா ரோசா பகுதியில் சமீபத்தில் தேசிய விடுதலை ராணுவத்தின் கொரில்லா குழுவிற்கும் வளைகுடா குலம் எனப்படும் போதைப்பொருள் கடத்தல் குழுவிற்கும் இடையே கடும் ண்டை ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 4 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

தமிழ்நாடு தென் அமெரிக்கா

3D அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் சார்ந்த துறைகளில் கடல் போல வாய்ப்புகள்

மாயா அகாடமி ஆஃப் அட்வான்ஸ்டு சினிமாட்டிக்ஸ் எனும் மாக்  (MAAC) கோவையில்  நவீன 3D அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் குறித்து இளம் தலைமுறை மாணவ,மாணவிகளுக்குபயிற்சி அளித்து
தென் அமெரிக்கா

அவள் என் காதலி.. 800 வருடங்கள் பழமையான மம்மியோடு பொலிஸில் சிக்கிய 26 வயது இளைஞன்!

பெரு நாட்டில் 800 வருடப் பழமையான மம்மியை உணவு வழங்கப்பயன்படும் பையில் வைத்து, எடுத்துச் செல்லும் போது காவல்துறையிடம் நபர் ஒருவர் சிக்கியுள்ளார். பெரு நாட்டை சேர்ந்த