பாகிஸ்தானில் இயங்கும் போராளிக் குழு சுற்றிவளைப்பு – இந்தியா மீது குற்றச்சாட்டு!
பாகிஸ்தானின் – கராச்சியில் BLA போராளிக் குழுவினரின் மறைவிடங்களை தாக்கியதாக அந்நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது.
குறித்த நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த விசேட இராணுவ நடவடிக்கையின்போது 03 நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும், சுமார் 2 டன் வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரி சுல்பிகர் அலி லாரிக் (Zulfiqar Ali Larik) மற்றும் துணை காவல் துறை அதிகாரி ஜெனரல் குலாம் அஸ்பர் மகேசர் (Ghulam Azfar Mahesar) ஆகியோர் இந்த நடவடிக்கையை உறுதிப்படுத்தியுள்ளனர்.
வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஒரு வாகனம் பயன்படுத்த தயாராக இருந்ததாக தெரிவித்த குலாம் அஸ்பர் மகேசர் (Ghulam Azfar Mahesar), இந்த போராளிக் குழுவினரை இந்தியா ஆதரித்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.





