கேனரி தீவுகளை அடைய முயன்ற புலம்பெயர்தோர் – படகின் சுமையால் சுட்டுகொல்லப்பட்டதாக தகவல்!

கேனரி தீவுகளை அடைய முயன்றபோது சுமார் 70 பேர் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அறிக்கைகளின்படி, அவர்களில் சிலர் கொல்லப்பட்டனர், அவர்களின் உடல்கள் அட்லாண்டிக் பெருங்கடலில் வீசப்பட்டன. படகில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் சிலர் சுட்டுக் கொல்லப்பட்டதாக உயிர் பிழைத்தவர்கள் கூறுகின்றனர். படகிலும் அதிக சுமை இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் சுமையை குறைக்க பலர் கொலை செய்யப்பட்டு கடலில் எரியப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது இந்த விவகாரம் விசாரணைகளை தூண்டியுள்ளது.
20 முதல் 30 புலம்பெயர்ந்தோர் கொலைகளைச் செய்ததாக சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப்படுவதாக ஸ்பானிஷ் செய்தி வலைத்தளமான ஒக்டியாரியோ தெரிவித்துள்ளது.
ஸ்பானிஷ் கடலோர காவல்படையினரால் மீட்கப்படுவதற்கு முன்பு ஒரு வாரத்திற்கும் மேலாக கப்பல் தத்தளித்தபோது நடந்த சம்பவங்கள் தொடர்பாக துப்பறியும் நபர்கள் “முதல் கைதுகளை செய்வதற்கு அருகில்” இருப்பதாக கூறப்படுகிறது.