ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறும் புலம்பெயர்ந்தோர்!
2026 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 28 மில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள்தொகை மையத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில், ஆஸ்திரேலியாவின் மக்கள்தொகை வளர்ச்சி இந்த ஆண்டு 1.3 சதவீதமாக குறையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்தோர் வருகையில் ஏற்படும் குறைவு மற்றும் புலம்பெயர்ந்தோர் புறப்பாடு அதிகரிப்பால் இந்த மெதுவான வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டில் நிகர வெளிநாட்டு இடம்பெயர்வு 260,000 ஆகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோவிட்-19க்குப் பிறகு தற்காலிக விசாக்களில் ஆஸ்திரேலியாவிற்கு வந்த பலர் தங்கள் விசாக்களின் காலாவதி திகதியை நெருங்கி வருவதால் பெரும்பாலானவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவார்கள் எனக் குறிப்பிடப்படுகிறது.
இதற்கிடையே ஆஸ்திரேலியாவின் பிறப்பு விகிதம் 2026 ஆம் ஆண்டிலும் தொடர்ந்து குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக டென்மார்க் மற்றும் அமெரிக்காவை விட ஆஸ்திரேலிய பெற்றோர் குழந்தை பெற்றுக்கொள்வதை தாமதப்படுத்துவதாகவும் அவ் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





