பிரான்சில் புலம்பெயர்ந்தோர் படகு விபத்துக்குள்ளானதில் ஒரு குழந்தை மரணம் – 65 பேர் மீட்பு
பிரான்ஸ் கடற்கரையில் உள்ள கால்வாயில் பிரித்தானியாவை நோக்கி அதிக சுமை ஏற்றப்பட்ட புலம்பெயர்ந்தோர் படகு மூழ்கியதில் ஒரு குழந்தை உயிரிழந்ததாக பிரெஞ்சு கடல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விபத்து பிரெஞ்சு நகரமான விஸ்சாண்டில் நிகழ்ந்ததாக சேனல் மற்றும் நார்த் சீக்கு பொறுப்பான கடல்சார் அதிகாரி தெரிவித்தார்.
விபத்தில் 65 பேர் மீட்கப்பட்டனர், ஆனால் ஒரு குழந்தை மயக்கமடைந்து இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
சமீபத்திய விபத்தின் பின் , இந்த ஆண்டு சேனலைக் கடக்க முயன்ற போது இறந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது





