உலகம் செய்தி

மத்திய கிழக்கு போர்: இராணுவ உதவி வழங்குமா ஆஸ்திரேலியா?

வளைகுடா நாடுகள் Gulf countries சில ஆஸ்திரேலியாவிடம் Australia இராணுவ உதவியை கோரியுள்ளன என்று ஆஸ்திரேலிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரான் தொடுக்கும் ட்ரோன் Drone மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கிலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஈரானுக்கு எதிராக நேரடித் தாக்குதலில் ஈடுபடாமல் தற்காப்பு நடவடிக்கைகளுக்கு மட்டும் ஆதரவளிப்பது குறித்து ஆஸ்திரேலிய Australian அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது எனவும் கூறப்படுகின்றது.

ஆஸ்திரேலியாவிடம் தற்போதுள்ள ஏவுகணை அமைப்பு அல்லது உள்நாட்டுத் தொழில்நுட்பங்களை வழங்குவது போன்ற மிகக் குறுகிய வாய்ப்புகளே உள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஈரானின் ஆட்சி மாற்றத்தை அந்நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும் என்பதில் ஆஸ்திரேலியா Australia உறுதியாக உள்ளது.

போரினால் வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் சுமார் 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆஸ்திரேலியர்களைப் பாதுகாப்பாக மீட்கும் பணிகளும் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலிய அரசு தனது தேசிய நலன் மற்றும் நட்பு நாடுகளுடனான உறவைச் சமன்படுத்தும் நோக்கில் இந்த ராணுவப் பங்களிப்பு குறித்து இறுதி முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!