நடுவானில் ஏற்பட்ட அசம்பாவிதம் : 3000 மைல் கடந்து பிரித்தானியாவிற்கு திருப்பிவிடப்பட்ட விமானம்!
அமெரிக்கா நோக்கி சென்ற விமானம் ஒன்று மான்செஸ்டருக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது.
விமானத்தில் பயணித்த பயணி ஒருவரின் மருத்துவ தேவையை கருத்தில் கொண்டு 3000 மைல் தொலைவில் மான்செஸ்டருக்கு திருப்பிவிடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமான நிலையத்தில் மருத்துவர்கள் குழு இருந்ததாகவும், நோயாளிக்கு உடனடியாக சிகிச்சையளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காண்டோர் விமானம் ஜெர்மனியின் பிராங்பேர்ட்டில் இருந்து புதன்கிழமை காலை ஜான் எஃப் கென்னடி விமான நிலையத்திற்கு புறப்பட்டது.
Condor விமானம் பிராங்பேர்ட்டில் இருந்து காலை 11.45 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2.52 மணிக்கு மான்செஸ்டரில் தரையிறங்க திட்டமிட்டதாக Flight Radar தெரிவித்துள்ளது.
(Visited 5 times, 1 visits today)