வாழ்வியல்

மனிதர்கள் உட்கொள்ளும் நுண்நெகிழி துகள்கள்

மனிதர்கள் உண்ணும் உணவுப் பொருட்கள், குடிக்கும் பானங்கள் மற்றும் சுவாசிக்கும் காற்றின் வழியாக நுண் நெகிழித் துகள்களை நுகர்வதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

மனிதர்கள் சாசரியாக ஒரு ஆண்டுக்கு 78 ஆயிரம் முதல் இரண்டு லட்சத்து பதினோராயிரம் நுண்நெகிழித் துகள்களை உட்கொள்வதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இதனால் இதயநோய், நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பாட்டிலில் அடைத்து விற்கப்படும் குடிநீரின் மூலமாகவே மனிதர்கள் அதிக அளவிலான நுண்நெகிழித் துகள்களை உட்கொள்வதாகக் கூறப்படுகிறது.

குடிநீர் பாட்டிலில் 94.4, பியரில் 32.3, காற்றின் மூலம் 9.8, குழாய் நீரின் மூலம் 4.2, கடல் உணவுகளிலிருந்து 1.5, சர்க்கரையிலிருந்து 0.4, உப்பிலிருந்தும் தேனிலிருந்தும் 0.1 நுண்நெகிழிகள் மனித உடலுக்குள் புகுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நெகிழி பாட்டில்களில் குடிநீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும், குடிநீர் சுத்திகரிப்புக்கு தரச் சான்றிதழ் பெற்ற வாட்டர் ஃபில்டர்களை பயன்படுத்த வேண்டும், உணவுப் பொருள்களை நெகிழி பாத்திரங்கள், டப்பாக்களில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். இது போன்ற நடவடிக்கைகளின் மூலம் நுண்நெகிழி உட்கொள்தலைத் தவிர்க்கலாம் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

You may also like

woman exercising
வாழ்வியல்

ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஸ்கிப்பிங் செய்வதால் பாரிய அளவு நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. ஸ்கிப்பிங் என்பது ஆரோக்கியமான உடற்பயிற்சி போன்றது. இது நீங்கள் தொடர்ந்து சுவாசிக்க உதவுகிறது மற்றும் இதயத்தை பலப்படுத்துகிறது.
vegetable and meat
வாழ்வியல்

ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா : இந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்!

ஒருவருக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு இருப்பதை விட குறைவாக இருந்தால் அவர் எப்போதும் சோர்வாக காணப்படுவார். இதைத் தவிர உடல் வலிமையின்மைஇ சருமம் மஞ்சள் நிறமாதல்,  அசாதாரமான