மெக்சிகன் கடற்படைக்குச் சொந்தமான விமானம் விபத்து – 05 பேர் உயிரிழப்பு!
டெக்சாஸின் (Texas) கால்வெஸ்டன் (Galveston) கடற்கரையில் மெக்சிகன் கடற்படைக்குச் சொந்தமான ஒரு சிறிய விமானம் நேற்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விமானத்தில் எட்டு பேர் பயணித்த நிலையில் 05 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விபத்துக்குள்ளான விமானம் “சிறப்பு மருத்துவ போக்குவரத்தை மையமாகக் கொண்ட மனிதாபிமான பணியை” மேற்கொண்டு வந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.
விபத்து தொடர்பிலான காரணம் கண்டறியப்படாத நிலையில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





