கடற்றொழிலாளர் சமூகத்தை இழிவுபடுத்தி பேசிய பாராளுமன்ற உறுப்பினர் : கண்டனம் தெரிவிப்பு
பாராளுமன்றத்தில் நீங்கள் என்ன வார்த்தைகளை பயன்படுத்துகிறீர்கள் என்பது எமக்கு தெரியும். ஆனால் பொது அமைப்புகளும் பங்கேற்கும் ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் கண்ணியமான வார்த்தைகளை பயன்படுத்துங்கள் என யாழ்ப்பாண மாவட்ட கிராமிய கடற்றொழிலாளர் அமைப்புக்களின் சம்மேளன தலைவர் செல்லத்துரை நற்குணம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் காடையர்கள் என கடற்றொழிலாளர் சமூகத்தை இழிவுபடுத்தி பேசியதற்கும் இதன்போது கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
(Visited 2 times, 1 visits today)