இலங்கை

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் முதல் செயலாளர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநருக்கு இடையில் சந்திப்பு!

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் முதல் செயலாளர் ( அபிவிருத்தி மற்றும் ஒத்துழைப்பு ) அசோக் குமார் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர ஆகியோருக்கு இடையே நேற்று (19) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் ஒரு சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது இந்திய உதவித் தொகையான  2.3 பில்லியனின் ரூபாயின் கீழ் கிழக்கு மாகாணத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து கலந்துரையாடிதுடன், திருகோணமலை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களைக் கண்காணிப்பதே தனது விஜயத்தின் நோக்கம் எனக் கூறினார்.

ஆரம்ப கட்டத்தில் இந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதற்கு வழங்கப்பட்ட ஆதரவுக்கு ஆளுநர் முதல் செயலாளருக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும் கிழக்கு மாகாணத்தில் இந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்த தனது குழு மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்படும் என்றும் கூறினார்.

டித்வா பேரழிவின் போது இந்திய அரசாங்கத்தின் உதவிகள் குறித்து கலந்துரையாடியதுடன் ஆளுநர் நன்றிகளையும் பகிர்ந்துக்கொண்டார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!