புதின் – ஹங்கேரி பிரதமர் இடையே சந்திப்பு ; கண்டனம் தெரிவித்துள்ள UN தலைவர்கள்
நேட்டோவிலும் ஐரோப்பிய யூனியனிலும் அங்கம் வகிக்கும் ஹங்கேரி நாட்டுப் பிரதமர் விக்டர் ஆர்பன் ரஷ்யாவில் அதிபர் விளாடிமிர் புதினுடன் பேச்சு வார்தை நடத்தினார்.
உக்ரைன் படையெடுப்புக்கி பின்னர் ஐரோப்பிய தலைவர் ஒருவர் ரஷ்யா சென்றுள்ளது இதுவே முதல் முறை.
உக்ரைன் சென்று அந்த நாட்டு அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கீயை சந்தித்து பேசிய சில நாட்களில் விக்டர் ஆர்பன் ரஷ்யாவுக்கும் முன்னறிவிப்பில்லாமல் தீடீர் பயணம் மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாஸ்கோவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் புதினுடன் பங்கேற்ற விக்டர் ஆர்பன் இது குறித்து கைறுகையில் ,போரில் ஈடுபட்டுள்ள ரஷ்யா. உக்ரைன் ஆகிய இரு நாடுகளுடனும் பேசக்கூடிய சர்வதேச நாடுகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது. எல்லா நாடுகளுடனும் பேசக்கூடிய ஒரே ஐரோப்பிய நாடு ஹங்கேரியாகத்தான் இருக்கும் என்ற நிலை ஏற்பட்டு வருகிறது. இந்த நட்புறவை பயன்படுத்தி அமைதியை ஏற்படுத்த முயல்கிறைன் என்றார் அவர்.
விக்டர் ஆர்பனுடன் நடத்திய பேச்சு வார்த்தை பயனுள்ளதாக இருந்தது என்று கூறிய புதின், ஐரோப்பிய கவுன்சிலில் பிரதிநிதியாக அவர் தன்னை சந்தித்து பேசியதாக கூறினார்.
உக்ரைன் போர் விவகாரத்தில் ஐரோப்பிய கவுன்சில் கருத்துக்களையும் அறிய ஆர்வமாக இருப்பதாக புதின் கூறினார். சுழற்சி முறையில் அந்தக் கவுன்சிலின் தலைமையை தற்போது ஹங்கேரி வகித்து வருவது குறிப்பிடதக்கது.
புதினுக்கு நெருக்கமானவராக அறியப்படும் விக்டர் ஆர்பன், உக்ரைனுக்கு ஐரோப்பிய யூனியன் ஆளிக்கும் ராணுவ உதவிகளை பல்வேறு காரணங்களை கூறி தடுத்தோ, குறைத்தோ வருவதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் அவர் ரஷ்யாவுக்கு சென்றுள்ளதை ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் கண்டித்துள்ளனர். தங்களது அனுமதியில்லாமல் அவர் ரஷ்யாவுக்கு சென்றுள்ளதாகவும் இநுத பயணத்துக்கும் ஐரோப்பிய யூனியனின் நிலைப்பாட்டுக்கும் தொடர்பில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் போரில் ரஷ்யா சர்வதேச சட்டங்களை மீறி செயல்படுவதாகக் குற்றம் சாட்டிவரும் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஹங்கேரிக்கும் இடையே இந்த சுற்று பயணம் விரிசலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.