ஆஸ்திரேலியாவில் சிகிச்சையில் குழப்பம் – வேறு ஒருவரின் குழந்தையைத் தவறுதலாக பெற்ற பெண்

ஆஸ்திரேலியாவில் செயற்கைக் கருத்தரிப்புச் சிகிச்சையில் ஏற்பட்ட குழப்பத்தால் பெண் ஒருவர் வேறு ஒருவரின் குழந்தையை பெற்றெடுததுள்ளார்.
பிரிஸ்பேன் நகரில் உள்ள Monash IVF கிளையில் பெண்ணுக்குத் தவறான கரு செலுத்தப்பட்டது.
கிளையில் உள்ள எஞ்சிய கருக்களை வேறு கிளைகளுக்கு மாற்றும்படி பெண் அண்மையில் கேட்டுக்கொண்ட பிறகே நடந்தது தெரியவந்தது.
பெண்ணின் கருக்களில் கூடுதலாக ஒன்று இருந்ததைக் கிளை கவனித்தது. அது பெண்ணுக்குச் செலுத்தப்படவிருந்த கரு என்றும் பெண்ணுக்கு உண்மையில் செலுத்தப்பட்டது இன்னொருவரின் கரு என்றும் தெரியவந்தது.
சம்பவத்துக்கு Monash IVF மன்னிப்புக் கேட்டுக்கொண்டது. ஆஸ்திரேலியாவில் செய்யப்படும் செயற்கைக் கருத்தரிப்புச் சிகிச்சைகளில் கால்வாசி Monash IVF கிளைகளில் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில் செயற்கைக் கருத்தரிப்பு மருந்தகங்களில் பாதுகாப்பு நடைமுறைகள் வலுப்படுத்தப்படவேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.