தட்டம்மை தடுப்பூசி பிரசாரம் – பாகிஸ்தானில் பயன்பெறும் மில்லியன் கணக்கான குழந்தைகள்!
பாகிஸ்தானில் தட்டம்மை, ரூபெல்லா மற்றும் போலியோ நோய்களைத் தடுக்கும் நோக்கில் தடுப்பூசி பிரசாரம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
57 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளை இலக்காகக் கொண்டு குறித்த பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நாட்டின் தேசிய அவசரகால செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 29 வரை நடைபெறும் இந்த இயக்கத்தின் மூலம், 34.5 மில்லியன் குழந்தைகளுக்கு தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசிகள் வழங்கப்படும்.
அதேபோல் 23.3 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளுக்கு போலியோ சொட்டுகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி குழுக்களை ஆதரிக்க உலக சுகாதார அமைப்பு 140,000 க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்களுக்கு பயிற்சி அளித்துள்ளதை தொடர்ந்து இந்த பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கடந்த மூன்று ஆண்டுகளில், பாகிஸ்தான் 131,000 க்கும் மேற்பட்ட தட்டம்மை வழக்குகளைப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





