பிரித்தானியாவில் தலைகீழாக ஓடும் கார் தயாரிப்பு

பிரித்தானியாவைச் சேர்ந்த மெக்மர்ட்ரி ஸ்பீர்லிங் நிறுவனம் தலைகீழாக ஓடும் காரை தயாரித்துள்ளது.
முன்னதாக குறித்த நிறுவனம் தயாரித்த ஹைபர் மின்சார கார், பல்வேறு சாதனைகளைத் தன்வசம் வைத்துள்ளது.
இந்நிலையில் தற்போது உலகின் முதல் தலைகீழாக ஓடும் காரினை தயாரித்த பெருமையையும் தனதாக்கியுள்ளது.
டவுன்ஃபோர்ஸ் ஆன் டிமாண்ட் விசிறி எனப்படும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் குறித்த கார் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி விரைவில் 100 கார்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதான அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு இந்த கார் சந்தைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 2 times, 2 visits today)