இலங்கை

மருத்துவச்சிகள் பற்றாக்குறையால் தாய் மற்றும் குழந்தை சுகாதார சேவைகள் ஆபத்தில்?

குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கு நிலவும் பற்றாக்குறையின் விளைவாக நாட்டில் தாய் மற்றும் குழந்தை சுகாதார சேவை வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அரசாங்க குடும்ப சுகாதார சேவைகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

நாட்டில் சுமார் 3,000 மருத்துவச்சிகள் பற்றாக்குறை இருப்பதாக மருத்துவச்சிகள் சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

மேலும், இவ்விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் இதுவரையில் எந்தவொரு தீர்வும் வழங்கப்படவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

“இந்தப் பற்றாக்குறை தொடருமானால், குடும்பச் சுகாதாரச் சேவையில் உள்ள வெற்றிடங்கள் தொடர்ந்து அதிகரித்து, ஆட்சேர்ப்புச் செயன்முறைகள் நடைபெறாவிடில், இந்த நாட்டில் தாய் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் வீழ்ச்சியடையும்”, என கொடித்துவக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

மருத்துவச்சிகளை விரைவில் சேவையில் சேர்த்துக் கொள்வது சுகாதார அமைச்சரின் பொறுப்பாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

(Visited 3 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்