ஈரானில் பாரிய மக்கள் புரட்சி – இணைய சேவைகள் முடக்கம்!
ஈரானில் வளர்ந்து வரும் போராட்டங்களுக்கு மத்தியில், அந்நாட்டின் தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
போராட்டக்காரர்களுக்கு வலுசேர்க்கும் வகையில் சந்தைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டங்கள் காரணமாக இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2270 இற்கும் மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் ஆர்வலர்கள் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
போராட்டங்களின் வளர்ச்சி ஈரானின் சிவில் அரசாங்கம் மற்றும் அதன் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மீதான அழுத்தத்தை அதிகரிக்கிறது.
இந்நிலையில் தற்போது தொலைத்தொடர்பு சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. ஈரானிய அரசாங்கத்தின் தலையீட்டின் காரணமாகவே மேற்படி சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.





