ஆசியா செய்தி

ஜப்பானில் அரிசி விலையில் பாரிய அதிகரிப்பு – பொது மக்களுக்கு மக்களுக்கு எச்சரிக்கை

ஜப்பானில் கடந்த சில மாதங்களாகவே அரிசியின் சராசரி விலை உயர்ந்து வருகிறது.

போதிய அறுவடை இல்லாதது அதற்கான காரணமாகும். இம்மாதத்தின் நடுவில் 5 கிலோ கிராம் அரிசியின் விலை 4,285 யென்னை தொட்டது.

சென்ற ஆண்டைவிட அது ஒரு மடங்கு அதிகமாகும். விலை உயர்வைச் சமாளிக்க அரசாங்கம் இருப்பில் இருக்கும் அரிசியை வழங்கி வருகிறது. ஆனால் அது அவ்வளவு பெரிய பலனைத் தரவில்லை.

இந்த நிலையில் அரிசியைத் தள்ளுபடி விலையில் விற்பனை செய்வதாகக் கூறும் இணையப்பக்கங்கள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு ஜப்பானின் வாடிக்கையாளர் விவகாரங்கள் நிலையம் கூறியுள்ளது.

மார்ச் மாதம் முதல் அத்தகைய இணையப்பக்கங்கள் குறித்த புகார்கள் அதிகரித்துள்ளதாக நிலையம் கூறியது. வாடிக்கையாளர்கள் சிலர் அந்த இணையப்பக்கங்களில் கட்டணங்களைச் செலுத்தினர்.

ஆனால் அரிசி அவர்களுக்கு வந்து சேரவில்லை. இணையப்பக்கங்களிலிருந்து அரிசி வாங்குவதற்கு முன் அதை முழுமையாக ஆராயும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

அரிசியை மிகக் குறைவான விலையில் விற்கும் தளங்களிலிருந்து அரிசி வாங்குவதைத் தவிர்க்கும்படி நிலையம் குறிப்பிட்டது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!