உலகம்

கனடாவில் பாரிய தங்கக்கொள்ளை – முக்கிய சூத்திரதாரி கைது!

கனடா வரலாற்றில் மிகப்பெரிய தங்கக் கொள்ளையில் ஈடுபட்ட சூத்திரதாரிகளில் ஒருவரான அர்சலான் சவுத்ரி (Arsalan Chaudhary) டொராண்டோவின் பியர்சன் (Toronto’s Pearson) சர்வதேச  விமான நிலையத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மீது 5000 இற்கும் அதிகமான திருட்டு குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

“புராஜெக்ட் 24 காரட்”  (Project 24 Carat) என்று அழைக்கப்படும் பரந்த அளவிலான விசாரணையின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

சுமார் $15 மில்லியன் மதிப்புள்ள 6,600 தங்கக் கட்டிகள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபர் கைது செய்யப்பட்டபோதிலும் கொள்ளையடிக்கப்பட்ட தங்கக் கட்டிகள் மீட்கப்படவில்லை.

இதேவேளை இந்த மோசடியில் முக்கிய பங்கு வகித்ததாக நம்பப்படும் முன்னாள் ஏர் கனடா ஊழியர் ஒருவர் இன்னும் தேடப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு நபர் கடந்த 2023 ஆம் ஆண்டு பென்சில்வேனியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தங்கத்தை விற்றதன் மூலம் பெறப்பட்டதாக நம்பப்படும் $312,000 மதிப்புள்ள ரொக்க பணத்தை மீட்டுள்ளதாகவும் காவல்துறையினர் மேலும் அறிவித்துள்ளனர்.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!