மாசிடோனியாவில் இரவு விடுதியில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து : 50 பேர் பலியானதாக தகவல்!

வடக்கு மாசிடோனியாவில் உள்ள ஒரு இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 50 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
குறித்த தீ விபத்தானது ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கோகானி நகரில் ஏற்பட்டது. அந்த இடத்தின் உள்ளே பட்டாசுகள் வெடித்ததாகக் கூறப்படுகிறது.
அரசு வழக்கறிஞர் அலுவலகத்தின் அறிக்கை ஒன்றில், “தீ விபத்தில் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
நாட்டின் பிரதமர் ஹிருஸ்டிஜன் மிக்கோஸ்கி சம்பவ இடத்திற்கு பயணம் செய்து வருவதாகவும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
(Visited 1 times, 1 visits today)