செய்தி

இத்தாலி மருத்துவமனையில் பாரிய தீ விபத்து – 3 பேர் மரணம் – 200 பேர் மீட்பு

இத்தாலியின் ரோமுக்கு அருகில் இருக்கும் டிவுலி (Tivoli) நகரில் மருத்துவமனையில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் முதியோர் மூவர் உயிரிழந்துள்ளனர். 4ஆவது நபரின் சடலம் மருத்துவமனையின் பிரேதப் பரிசோதனை அறையில் கண்டெடுக்கப்பட்டது.

ஆனால் அவர் தீ ஏற்படுவதற்கு முன்பே உயிரிழந்துவிட்டதாக நம்பப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு நடந்த அந்தச் சம்பவத்தில் இடம்பெற்றுள்ளது.

மருத்துவமனையில் இருந்து 200 பேர் காப்பாற்றப்பட்டனர். அவர்களில் கர்ப்பிணிகளும் சிறுவர்களும் அடங்குவர். அவர்களை வெளியே கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் ஏணிப் படிகளைப் பயன்படுத்தினர்.

காப்பாற்றப்பட்டவர்கள் சிகிச்சைக்காக ரோமில் உள்ள இதர மருத்துவமனைகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

தீ முழுவதும் அணைக்கப்பட்டுவிட்டது. தீ ஏற்பட்டதற்கான காரணம் ஆராயப்படுவதாகத் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!