இலங்கை செய்தி

இலங்கையில் பாரிய போதைப்பொருள் கடத்தல் – 300 மில்லியன் ரூபா சொத்து முடக்கம்

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண் சந்தேகநபர் ஒருவருக்குச் சொந்தமான 300
மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய சொத்துக்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈட்டப்பட்ட வருமானத்தில் இந்தச் சொத்துக்கள் கொள்வனவு
செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது

இதற்கமைய கொழும்பு 14 மற்றும் ஜா-எல பகுதிகளில் அமைந்துள்ள 514 இலட்சம் ரூபாவுக்கும் அதிக
பெறுமதியுடைய காணி, 04 கடை அறைகள், மூன்று மாடி வீடு மற்றும் 59 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய 06
வங்கி கணக்குகள் ஆகியவற்றை, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்குவதற்கான உத்தரவுகளை நீர்கொழும்பு மற்றும் கொழும்பு மேல் நீதிமன்றங்கள் நீடித்து அமுல்படுத்தியுள்ளன.

விசாரணைகளின் போது, வெல்லம்பிட்டி பகுதியில் 30 மில்லியன் ரூபா பெறுமதியான
மற்றுமொரு சொகுசு வீடும் கண்டறியப்பட்ட நிலையில் அதனை மார்ச் 20 ஆம் திகதி முதல் 07 நாட்களுக்கு முடக்குவதற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!