ஆப்பிரிக்காவின் தலைநகரில் பாரிய துப்பாக்கி சூடு – 11 பேர் பலி!
ஆப்பிரிக்காவின் தலைநகரில் இன்று இடம் பெற்ற பாரிய துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் 14 பேர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் தொடர்பான விவரங்களை காவல்துறையினர் வெளியிடவில்லை.
உரிமம் இன்று இயங்கி வந்த பார் ஒன்றில் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் முன்னெடுக்கப்பட்டதாக காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் மூன்று வயது குழந்தை 12 மற்றும் 16 வயதுடைய இரண்டு சிறுவர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று தாக்குதல் தாரிகளை தேடி வருவதாகவும் காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.





