அமெரிக்க பயணிகள் கப்பலில் பலருக்கு வைரஸ் தொற்று!
கரீபியன் தீவுக்கு சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருந்த சுமார் 100 பேர் நோரோ வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 28 முதல் ஜனவரி 9 வரை ஃபோர்ட் லாடர்டேலில் (Fort Lauderdale) இருந்து தெற்கு கரீபியன் தீவுக்கு (Caribbean) அமெரிக்காவின் பயணக் கப்பல் ஒன்று சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டிருந்தது.
குறித்த கப்பலில் பயணித்த 2,593 பயணிகளில் 94 பேர் இரைப்பை குடல் அறிகுறிகள் தொடர்பில் முறைப்பாடு அளித்துள்ளனர்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, கப்பல் குழுவினர் அதிகரித்த சுத்தம் மற்றும் கிருமி நீக்கம் நடைமுறைகளைச் செயல்படுத்தியதுடன், நோய்வாய் பட்ட பயணிகளை தனிமைப்படுத்தியுள்ளனர்.
அத்துடன் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் சுகாதாரத் திட்டத்தை நாடியுள்ளனர். இதற்கமைய பலருக்கு விரைவாக சிகிச்சையளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





